கார் மோதி லாரி டிரைவர் பலி

ராசிபுரம் அருகே கார் மோதிய விபத்தில் லாரி டிரைவர் இறந்தார்.
கார் மோதி லாரி டிரைவர் பலி
Published on

ராசிபுரம்

ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப் பட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் லோகதாஸ் (வயது 30). லாரி டிரைவர். இவர் நேற்று காலையில் மொபட்டில் ராசிபுரம் அருகே உள்ள சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆயா கோவில் பிரிவு ரோடு அருகே சென்டர் மீடியன் வழியாக வீட்டுக்குச் செல்வதற்காக ரோட்டை கடந்துள்ளார். அப்போது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கிச் சென்ற கார் அவர் சென்ற மொபட்டின் மீது மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே லோகதாஸ் பரிதாபமாக இறந்தார். இவருக்கு திருமணம் ஆகி கீர்த்திகா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இது பற்றி ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த லோக தாஸ் உடல் பிரேத பரிசோதனை ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com