விபத்தில் லாரி டிரைவர் பலி

எருமப்பட்டி அருகே விபத்தில் லாரி டிரைவர் இறந்தார்.
விபத்தில் லாரி டிரைவர் பலி
Published on

எருமப்பட்டி

கரூர் மாவட்டம் அரவகுறிச்சி அருகே உள்ள வேலம்பாடியை சேர்ந்தவர் முகமது மகன் சலீம் (வயது 47). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி பொன்னேரி கைகாட்டில் உள்ள தனியார் நூற்பாலைக்கு வந்துவிட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது எருமப்பட்டியில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சலீம் உயிரிழந்தார். இது குறித்து எருமப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com