வாடிப்பட்டி அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் பலி..!

வாடிப்பட்டி அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் பலியான நிலையில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
வாடிப்பட்டி அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் பலி..!
Published on

மதுரை:

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் டிரைவர் தாமோதரன் (வயது 27). இவர் நேற்று இரவு தனியாக கோயம்புத்தூரில் இருந்து புறப்பட்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது இன்று காலை 10.30 மணிக்கு வாடிப்பட்டி அருகே வந்தபோது தூக்கக்கலக்கத்தில் எதிர்பாராதவிதமாக மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற ஆம்னி வேன் மீது கார் மோதியது.

இதில் கார் கவிழ்ந்ததில் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே தாமோதரன் பரிதாபமாக இறந்தார். ஆம்னி காரில் வந்த மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக வாடிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com