திருப்பூரில் செல்போன் பேசியபடி அரசு பேருந்தை ஓட்டிய டிரைவர் சஸ்பெண்டு

திருப்பூரில் செல்போன் பேசியபடி அரசு பேருந்தை ஓட்டிய டிரைவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூரில் செல்போன் பேசியபடி அரசு பேருந்தை ஓட்டிய டிரைவர் சஸ்பெண்டு
Published on

திருப்பூர்,

திருப்பூரில் இருந்து பெருமாநல்லூருக்கு அரசு பேருந்து சென்றது. பேருந்தை டிரைவா சதாசிவம் என்பவர் ஓட்டினார். அப்போது அவர் ஒரு கையில் போன்.. மறு கையில் ஸ்டீயரிங் என நீண்ட நேரமாக செல்போனில் பேசியபடி அரசு பேருந்தை ஓட்டிச் சென்றார்.

ஒரு நிமிடத்திற்கு மேல் செல்போனில் பேசியபடி பேருந்தை ஓட்டியதால் அதிர்ச்சியடைந்த பயணி ஒருவா அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அனுப்பியதுடன் சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதையடுத்து டிரைவர் சதாசிவத்தை போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல மேலாளர் சிவக்குமார் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். மேலும் பேருந்தை இயக்கும்போது டிரைவர்கள் செல்போனை பாக்கெட்டில் வைக்க கூடாது; கண்டக்டரிடம் கொடுத்து வைக்க வேண்டும். அவசரமாக யாராவது தொடர்பு கொண்டு பேசினால் சாலையோரம் பஸ்சை நிறுத்தி பேச வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் பேருந்தை ஓட்டியபடி செல்போன் பேசக்கூடாது என்று அறிவுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com