

நெகமம்
நெகமத்தை அடுத்த சின்னேரிபாளையத்தை சேர்ந்தவர் கோகுல்(வயது 28). சரக்கு ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த கதிராள்(70) என்பவரது வீட்டின் முன்பு இருந்த முருங்கை மரத்தின் மீது சரக்கு ஆட்டோவால் மோதியதாக தெரிகிறது. இதை கதிராள் தட்டி கேட்டார். இதில் கோகுல் ஆத்திரம் அடைந்து கதிராளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த கதிராள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கோகுலை வலைவீசி தேடி வருகின்றனர்.