தமிழக அரசு நடத்திய கல்வி விழா ஒரு நாடகம் - வானதி சீனிவாசன் விமர்சனம்

மக்களை ஏமாற்ற துறைக்கு சம்பந்தமில்லாத சினிமா துறையினரை வைத்து பேச வைத்துள்ளனர் என வானதி சீனிவாசன் விமர்சனம் செய்தார்.
கோவை,
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
“தமிழக அரசு நடத்திய கல்வி விழா ஒரு புதிய நாடகம். மக்களை ஏமாற்ற துறைக்கு சம்பந்தமில்லாத சினிமா துறையினரை வைத்து பேச வைத்துள்ளனர். இது திமுகவிற்கு புதிதல்ல, திராவிட மாடல் அரசு என்றாலே டிராமா அரசு தான்.
முதல்-அமைச்சார் மு.க.ஸ்டாலின் திட்டம் துவங்குவதற்கும், அந்த திட்டம் மக்களிடம் கொண்டு சேர்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. கேமரா முன் நல்லாதான் இருக்கு. டிராமா அரசாங்கத்தின் நடவடிக்கைதான் தமிழக அரசின் கல்வி விழா. அரசு பள்ளிக் கூடங்களை மூடுவது, ஆசிரியர்கள் பற்றாக்குறை , வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் பள்ளி நடத்துவது, பள்ளி குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் பள்ளிகளிலே சாதி ரீதியான மோதல் இதையெல்லாம் கல்வியில் சிறந்த மாநிலத்தில் சேர்த்துக் கொள்வார்களா?”
இவ்வாறு அவர் பேசினார்.






