‘தேர்தல் ஆணையம் யாரையும் மாற்றலாம்; மக்களை ஏமாற்ற முடியாது’ - கி.வீரமணி

தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தை மீறி அதீத நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது என கி.வீரமணி விமர்சித்துள்ளார்.
‘தேர்தல் ஆணையம் யாரையும் மாற்றலாம்; மக்களை ஏமாற்ற முடியாது’ - கி.வீரமணி
Published on

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பா.ஜனதா கட்சியை தமிழ்நாட்டு தேர்தல் தோல்வி பயம் பிடித்து ஆட்டத் தொடங்கிவிட்டது. தேர்தல் ஆணையம் தன்னுடைய அதிகார எல்லைகளை மீறி பல்வேறு அதீத நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. முதலில் மாவட்ட அளவில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு போன்றவர்களை திட்டமிட்டே மாற்றினார்கள்.

தமிழ்நாட்டின் டி.ஜி.பி.யை மாற்றினார்கள். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரையும், டி.ஜி.பி.க்களில் மற்றொருவரையும் மாற்றி இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் யாரையும் மாற்றலாம். மக்களை ஏமாற்ற முடியாது. வருகிற 23-ந் தேதி மக்கள் தீர்ப்பளிப்பார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com