

தேனி,
கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்திய காளை மாட்டை விரட்டச் சென்ற ஊழியரை அடுத்த நொடியே முட்டித் தூக்கியது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பேருந்து நிலையம் அருகே இரண்டு மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஜமீந்தாரணி காமுலம்மாள் மேல்நிலைப்பள்ளி அருகே செயல்பட்டு வரும் கடைக்குள் காளை மாடு ஒன்று புகுந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை காளை மாடு முட்டி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.இதில் லேசான காயங்களுடன் கருப்பையா அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
போடிநாயக்கனூர் பகுதியில் சிலர் கால்நடைகளை வளர்த்து அவற்றை சாலைகளில் அவிழ்த்து விடுவதால், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, இதே பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு இரண்டு கழுதைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை கழுதை தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவமும் நடைபெற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தி, அவற்றை உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.