புது வரலாறு படைத்துள்ள திமுகவை இந்தியாவே பேசுகிறது: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

50, 60 களில் பார்த்த திமுக எது என்று கேட்டவர்களுக்கு நேற்று இதுதாண்டா அந்த திமுக என்று காட்டியுள்ளோம். என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
புது வரலாறு படைத்துள்ள திமுகவை இந்தியாவே  பேசுகிறது:  முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பரவட்டும் என்று நான் சொன்ன தீ, நாடாளுமன்றம் வரை பற்றியுள்ளது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் நண்பர்கள் யார்? துரோகிகள் யார் யார் என்பதை அடையாளம் காட்டியுள்ளது. புது வரலாறு படைத்துள்ள திமுகவை இந்தியாவே உயர்வாக பேசுகிறது.

நமது வெற்றி தொடரட்டும். வெல்வோம் ஒன்றாக! 50, 60 களில் பார்த்த திமுக எது என்று கேட்டவர்களுக்கு நேற்று இதுதாண்டா அந்த திமுக என்று காட்டியுள்ளோம். தொகுதி மறுவரையறை என்ற கருப்பு சட்டத்துக்கு எதிரான திமுகவின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மக்களவையில் நேற்று தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பான வாக்கெடுப்பில் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி அடைந்தது. இதனை வரவேற்றுள்ள முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com