திருச்சி ரெயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும்: தமிழிசை

திருச்சி ரெயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சி ரெயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும்: தமிழிசை
Published on

சென்னை,

புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரெயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு “ கர்தவ்ய த்வார்” என இந்தியில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தெற்கு ரெயில்வேயின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அதிகாரிகள் செய்த தவறுகளால், தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர். இந்தி பெயரை உடனடியாக நீக்கி தமிழ் பெயரை வைக்க வேண்டும் என மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு கோரிக்கை வைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com