புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது - டாக்டர் ராமதாஸ்

புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது - டாக்டர் ராமதாஸ்
Published on

சென்னை,

வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் நலனுக்காக புலம்பெயர் தமிழர் நல வாரியம் என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

வெளிநாடு வாழ் தமிழர் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை நடைமுறைக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி! என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com