தீயசக்தி திமுகவை வேரோடு வீழ்த்த வேண்டும் - அண்ணாமலை

மாதம் ஒருமுறை மின்கட்டணம் கணக்கீடு செய்யப்படும் என வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றியது திமுக.
தீயசக்தி திமுகவை வேரோடு வீழ்த்த வேண்டும் - அண்ணாமலை
Published on

கோவை,

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

வரும் 23-ந் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் நமது அதிமுக வெற்றி வேட்பாளர் கே.ஆர்.ஜெயராமை ஆதரித்து, இன்றைய தினம் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.

கடந்த 5 ஆண்டுகளாக, மாநகராட்சிகளில் சொத்து வரியை 700%க்கும் மேல் உயர்த்தி இருக்கிறார்கள். நகராட்சிகளில் சொத்து வரியை 400% உயர்த்தி இருக்கிறார்கள். மின் கட்டணம் பல முறை உயர்த்தப்பட்டது. ஆனால், மாதம் ஒருமுறை மின்கட்டணம் கணக்கீடு செய்யப்படும் என வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றியது திமுக. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காமல், விவசாயிகளை காக்க முடியாத, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியாத நிலையில் மிகமோசமான ஆட்சியை நடத்தி, மக்களை ஏமாற்றி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கும் தீயசக்தி திமுகவை வேரோடு வீழ்த்த வேண்டியது தமிழக மக்களின் கடமையாக மாறியிருக்கிறது.

எனவே, வரவிருக்கும் தேர்தல் நாள் அன்று, சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம்-க்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லட்டும்! சிங்காநல்லூர் செழிக்கட்டும்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com