

சென்னை,
தங்கம், வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக கட்டுக்கடங்காமல் எகிறி வருகிறது. தினமும் உச்சம் என்ற பாணியில் பயணிக்கிறது. இப்படியாக கடந்த 2024-ம் ஆண்டு விலை அதிகரித்து வந்த நேரத்தில், மத்திய பட்ஜெட்டின்போது இறக்குமதி வரி குறைக்கப்பட்டது.
2024-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தங்கம் மற்றும் வெள்ளி மீதான ஒட்டுமொத்த இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியான அன்றைய தினமே, தங்கம் விலை கிராமுக்கு ரூ.275-ம், பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 200-ம் குறைந்திருந்தது.
அதேபோல், நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பிலும், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி சற்று குறையும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாக பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.