தியாகி சங்கரலிங்கனாரின் புகழும் தியாகமும் என்றும் நிலைத்திருக்கும் - உதயநிதி ஸ்டாலின்

தனது கோரிக்கையில் உறுதியுடன் நின்று 76 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து போராட்டக்களத்திலேயே மறைந்தவர்.
உதயநிதி ஸ்டாலின்
Published on: 

சென்னை,

தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு நாளையொட்டி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

தியாகி சங்கரலிங்கனார்

இது தொடர்பாக, உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

நம் மாநிலத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டுமென தன்னுயிர் தந்த தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு நாள் இன்று. தனது கோரிக்கையில் உறுதியுடன் நின்று 76 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து போராட்டக்களத்திலேயே மறைந்தவர்.

அவரது போராட்டத்துக்கும் - தியாகத்துக்கும் அன்றைய ஆட்சியாளர்கள் செவிசாய்க்காத நிலையில், முதல் முறையாக கழக ஆட்சி அமைந்த போது, பேரறிஞர் அண்ணா அவர்கள், தாய் நிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டி சங்கரலிங்கனாரின் தியாகத்தைப் போற்றினார்.

தமிழ்நாடு போல் சங்கரலிங்கனாரின் புகழும் - தியாகமும் என்றும் நிலைத்திருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com