உழவு பணியின் போது எந்திரத்தில் சிக்கி விவசாயி பலி

உழவு பணியின் போது எந்திரத்தில் சிக்கி விவசாயி பலியானார்.
உழவு பணியின் போது எந்திரத்தில் சிக்கி விவசாயி பலி
Published on

காரியாபட்டி தாலுகா அரசகுளம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 35). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான பவர் டில்லர் மிஷன் மூலம் அரசகுலம் கிராமத்தை சேர்ந்த மாரநாடு பகுதியில் உழவு பணியில் ஈடுபட்டார். அப்போது பாலகிருஷ்ணனின் கால், பவர் டில்லர் சக்கரத்தில் சிக்கி பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தா. இது குறித்து ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com