கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

ஆலங்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலியானார்
கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலியானார்.

விவசாயி

தன்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே துத்திக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துமாரி (வயது 33). விவசாயி. இவருடைய மனைவி ராமலட்சுமி.

நேற்று முன்தினம் முத்துமாரி அப்பகுதியில் உள்ள தனது வயலில் நெல் நாற்று நடவு பணிகள் நடைபெற்றதை பார்க்க சென்றார். பின்னர் மாலையில் நீண்ட நேரமாகியும் முத்துமாரி வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

கிணற்றில் தவறி விழுந்து...

இதையடுத்து கணவரைத்தேடி மனைவி ராமலட்சுமி வயலுக்கு சென்றார். அப்போது வயல் அருகில் உள்ள கிணற்றில் முத்துமாரி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆலங்குளம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கிணற்றில் இறந்து கிடந்த முத்துமாரியின் உடலை மீட்டு பிரேத பரிசேதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முத்துமாரி கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com