கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

அரக்கோணம் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.
கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி
Published on

அரக்கோணம்

அரக்கோணம் அருகே சித்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ் (வயது 45), விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

மது பழக்கத்திற்கு ஆளாகின நடராஜ் சம்பவத்தன்று மதுபோதையில் தனது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com