

மதுரை,
மதுரை மத்திய சிறையில் கைதிகள் மற்றும் போலீசார் இடையே கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது. சிறையில் உள்ள கட்டிடத்தின் மீது ஏறி நின்று கைதிகள் போராட்டம் நடத்தினர்.
காவல் துறையினர் தங்களை துன்புறுத்துவதாக கூறி, சட்டைகளை களைந்து கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவலர்கள் மீது கைதிகள் கற்களை கொண்டு வீசினர் என கூறப்படுகிறது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
கைதிகளை கீழே இறங்கும்படி கூறி அவர்களிடம் காவல் துறை உயரதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர். கைதிகளின் இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.