தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 15 ஆம் தேதி வெளியீடு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 15 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 15 ஆம் தேதி வெளியீடு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் 16வது சட்டமன்ற தேர்தல் வரும் 2021 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான பணிகளை தொடங்க தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. அதன்படி ஊரடங்கு முடிவடைந்ததும் அடுத்த மாதம் தமிழக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் வரும் நவம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய டிசம்பர் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com