சாலையில் சுற்றித்திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ரூ.5 ஆயிரமாக உயர்வு -ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நங்கநலலூர் பகுதியில் நேற்று நேரில் சென்று மாநகராட்சி ஊழியர்கள் மாடுகள் பிடிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சாலையில் சுற்றித்திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ரூ.5 ஆயிரமாக உயர்வு -ராதாகிருஷ்ணன் தகவல்
Published on

சென்னை,

சென்னை ஆலந்தூர் மண்டலம், நங்கநல்லூரில் நேற்று முன்தினம் மாடுகள் முட்டியதில் ஓய்வுபெற்ற தபால் அதிகாரி சந்திரசேகர் (வயது 63) உயிரிழந்தார். இதையடுத்து சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நங்கநலலூர் பகுதியில் நேற்று நேரில் சென்று மாநகராட்சி ஊழியர்கள் மாடுகள் பிடிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் சாலை மற்றும் தெருக்களில் மாடுகள் நடமாடுவதை கட்டுப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளுக்கான பராமரிப்பு மற்றும் அபராத தொகை மாடு ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாடுகளை பராமரிக்க மாடுகள் பிடிக்கப்பட்டதில் இருந்து 3-ம் நாள் முதல் நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மீண்டும் அதே மாடுகள் பிடிக்கப்பட்டால் அபராத தொகை ரூ.10 ஆயிரம் ரூபாயாகவும் விதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com