படகில் இருந்த மரப்பலகை தலையில் விழுந்து மீனவர் சாவு

கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது படகில் இருந்த மரப்பலகை தலையில் விழுந்து மீனவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படகில் இருந்த மரப்பலகை தலையில் விழுந்து மீனவர் சாவு
Published on

சேதுபாவாசத்திரம்:

கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது படகில் இருந்த மரப்பலகை தலையில் விழுந்து மீனவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீனவர்

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டினம் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 46).மீனவர். இவர் சக மீனவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த மருதை என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றார்.

மல்லிப்பட்டினம் துறைமுக பகுதியில் இருந்து, சுமார் 6 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் நேற்று முன்தினம் இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.

தலையில் மரப்பலகை விழுந்து சாவு

அப்போது, படகில் இருந்த கனமான மரப்பலகை முருகன் தலையில் விழுந்தது. இதில் படுகாயமடைந்த முருகனை உடன் இருந்த மற்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு கொண்டு வந்தனர்.

அங்கிருந்து சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்த புகாரின் பேரில், சேதுபாவாசத்திரம் கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த முருகனுக்கு மகமாயி (42) என்ற மனைவியும், மற்றும் 2 மகள்களும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com