படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம்

படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் மாயமானார்.
படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம்
Published on

ராமேசுவரம், 

பாம்பன் தெற்குவாடி பகுதியை சேர்ந்தவர் பாண்டி (வயது 30). மீனவரான இவர், மீன்பிடி வலை, டீசல் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை சிறிய நாட்டு படகில் ஏற்றி சென்றார். அங்கு நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகளில் இந்த மீன்பிடி சாதனங்களை ஏற்றி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பாண்டி திடீரென தடுமாறி கடலுக்குள் விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சகமீனவர்கள் அவரை தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த மண்டபம் கடலோர போலீசார் அங்கு சென்று மீனவர்கள் உதவியுடன் பாண்டியை தேடி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com