கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயம்

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயம் ஆனார்.
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயம்
Published on

தொண்டி, 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி(வயது 40). இவர் நேற்று அதிகாலை கடலில் மீன் பிடிப்பதற்காக படகு ஒன்றில் தனியாக சென்றுள்ளார்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் கரை திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது குடும்பத்தினர் இதுகுறித்து தொண்டி கடற்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மீனவர் ராஜீவ் காந்தியை போலீசார் தேடி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com