காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டத்தை கைவிட வேண்டும் - தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டத்தை கைவிட வேண்டும் என்று தொல்.திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எண்ணூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தின் விரிவாக்கமானது, அதானி குழுமத்தின் ஆக்டோபஸ் பேராதிக்கமாகும். எல் அண்டு டி நிறுவனத்துக்கு சொந்தமான அத்துறைமுகத்தை தமதாக்கிக்கொண்ட அதானி குழுமம், தற்போது அதனை பல ஆயிரம் மடங்கு பரப்பளவில் விரிவாக்கம் செய்ய முனைகிறது. அதற்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதியைக் கோரியுள்ளது.

அதன்படி, சட்டப்படியான சில சடங்குகளைச் செய்யும் வகையில், வரும் ஜனவரி 22-ந் தேதி அன்று அதற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்பு' கூட்டத்தை நடத்தவுள்ளன. குறிப்பாக, தமிழக அரசு அதற்குரிய அறிவிப்பைச் செய்துள்ளது.

வேளாண்மை உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் அதானி குழுமத்தின் பேராதிக்கத்துக்கு முழுமூச்சாக தோள்கொடுத்துவரும் மோடியின் பா.ஜ.க. அரசு, தமிழகத்தில் ஏற்கனவே இயங்கிவரும் அரசு துறைமுகங்களை முறையாகவும், வெற்றிகரமாகவும் இயங்க ஆவனசெய்ய வேண்டும். காட்டுப்பள்ளிதுறைமுக விரிவாக்க திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com