அரசு ஆரம்ப சுகாதார நிலைய அடிக்கல் நாட்டு விழா

அரசு ஆரம்ப சுகாதார நிலைய அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
அரசு ஆரம்ப சுகாதார நிலைய அடிக்கல் நாட்டு விழா
Published on

இளையான்குடி

இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி.தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய சுகாதார நிலைய கட்டிட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி சிறப்புரை ஆற்றினார்கள். முன்னதாக மருத்துவதுறை துணை இயக்குனர் டாக்டர் விஜய் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், ஒன்றிய கழக செயலாளர்கள் ஆறு.செல்வராஜன், தமிழ்மாறன், இளையான்குடி தாசில்தார் கோபிநாத், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் அல்அமீன், மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், இளையான்குடி நகர தலைவர் குமார், சாலைக்கிராமம் வட்டார தலைவர் விஜயகுமார், வட்டார துணைத் தலைவர் ராஜ்குமார், மாவட்டச்செயலாளர் நாகராஜ், ஊராட்சி மன்ற தலைவர் தங்கம், கவுன்சிலர்கள் செல்வி சாத்தையா, மலையரசி ரவிச்சந்திரன், விவசாய அணி காளிமுத்து, தகவல் தொழில் நுட்ப அணி கண்ணன் தனசேகரன், ஒன்றிய அவை தலைவர் கணேசன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரசுத்துறை அதிகாரிகள் ஒன்றிய, நகர கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் ரெஜிஸ் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com