காரில் ஆடுகளை திருடிய கும்பல் தப்பி ஓட்டம்

ஆண்டிமடம் அருகே காரில் ஆடுகளை திருடிய கும்பல் தப்பி ஓடியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரில் ஆடுகளை திருடிய கும்பல் தப்பி ஓட்டம்
Published on

ஆடுகள் திருட்டு

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் செல்வையா, செல்வம். இவர்கள் ஆடுகளை வளர்த்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் செல்வையா, செல்வம் ஆகியோரது வீடுகளில் இருந்த ஆடுகளை மர்ம ஆசாமிகள் திருடிக் கொண்டு அதே பகுதியில் வசிக்கும் தங்கசாமி என்பவரது வீட்டின் முன்பு கட்டியிருந்த ஆட்டை திருடி காரின் டிக்கியில் போட்டுக்கொண்டு தப்பி செல்ல முயன்றனர். அப்போது சத்தம் கேட்டு விழித்த தங்கசாமி குடும்பத்தினர் மோட்டார் சைக்கிளில் அந்த காரை துரத்தி சென்றுள்ளனர்.

போலீசார் விசாரணை

இதனால் பீதியடைந்த மர்ம ஆசாமிகள் தேவனூர் அருகே காரை நிறுத்திவிட்டு அங்கு இருந்து தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆடுகளுடன் காரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் காரில் இருந்த 8 ஆடுகளையும் அதன் உரிமையாளர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com