குளத்தில் மூழ்கி சிறுமி பலி

நெல்லை அருகே குளத்தில் மூழ்கி சிறுமி பலியானார்.
குளத்தில் மூழ்கி சிறுமி பலி
Published on

நெல்லை பாளையங்கோட்டை அருகே மருதூர் இந்திரா நகர் வேதக்கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். கூலி தொழிலாளி. இவரின் மகள்கள் மகேஸ்வரி, மகாலட்சுமி (வயது 16). இவர்கள் 2 பேரும் நேற்று மாலை அருகே உள்ள கல்மடை குளத்திற்கு குளிக்க சென்றனர்.

மகேஸ்வரி சீக்கிரமாக குளித்துவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். வெகு நேரமாகியும் மகாலட்சுமி வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த மகேஸ்வரி மீண்டும் குளத்திற்கு சென்று அவரை தேடினார்.

அப்போது மகாலட்சுமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மகாலட்சுமியின் உடல் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com