சிறுமிக்கு பாலியல் தொல்லை

மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
Published on

மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

பாலியல் தொல்லை

மணல்மேடு அருகே உள்ள திருவாளபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் பஷீர்அகமது (வயது 63). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். இவரது கடைக்கு நேற்று முன்தினம் காலை 6- ம் வகுப்பு படித்து வரும் 11 வயது சிறுமி, பால்பாக்கெட் வாங்க வந்துள்ளார். அப்போது அந்த சிறுமிக்கு சாக்லட்டுகளை கொடுத்து ஆசை வார்த்தையை கூறி கடைக்குள் அழைத்து சென்ற பஷீர்அகமது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

போக்சோவில் முதியவர் கைது

மேலும் அந்த சிறுமியிடம் இதைவெளியில் சொல்லக்கூடாது என்றும், வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து சிறுமியின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஷீர்அகமதுவை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com