காதலை ஏற்க மறுத்த பெண்: வாலிபர் எடுத்த விபரீத முடிவு

காதலை பெண் ஏற்க மறுத்ததால் வாலிபர் விரக்தி அடைந்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கோயம்புத்தூர்,

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சய் (24 வயது). இவர் கோவை ஒண்டிப்புதூரில் தங்கி சூலூர் காங்கேயம் பாளையத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அதை அந்த பெண் ஏற்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சஞ்சய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காதலை பெண் ஏற்க மறுத்ததால் விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com