பணம் எடுத்த இளம்பெண் கைது

நர்சின் ஏ.டி.எம். கார்டை திருடி பணம் எடுத்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
பணம் எடுத்த இளம்பெண் கைது
Published on

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி முத்துமாரி (வயது 45). தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைபார்த்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் ஆஸ்பத்திரியில் இருந்து பாளையங்கோட்டை மார்க்கெட்டுக்கு பஸ்சில் சென்றார். அப்போது கூட்டநெரிசலை பயன்படுத்தி முத்துமாரி கைப்பையில் இருந்த ரூ.1,800 மற்றும் ஏ.டி.எம். கார்ட்டை மர்மநபர் திருடிச்சென்றார். மேலும் அந்த ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி சுமார் ரூ.6 ஆயிரத்து 500 வரை எடுத்துள்ளார்.

இதுகுறித்து முத்துமாரி பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி விசாரணை நடத்தினார். விசாரணையில், நெல்லை தச்சநல்லூரை சேர்ந்த ரஞ்சித் மனைவி பூமிசா துரைராணி (28) என்பவர் முத்துமாரியின் ஏ.டி.எம். கார்டை திருடி பணம் எடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, ரூ.8 ஆயிரத்து 300 மற்றும் ஏ.டி.எம். கார்டை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com