

அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருங்குடி ஆவணம் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன் இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் காலில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக வந்த போது மதிவாணன் கனுக்காலில் ஏற்பட்ட காயத்தால் வலியில் துடித்து உள்ளார். இதையடுத்து மருத்துமனையில் உள்ள ஊழியர்கள் காலில் தையல் போட்டு உள்ளனர்.
இதையடுத்து வீட்டிற்கு வந்த மதிவாணனுக்கு தொடர்ந்து காலில் வலி இந்துள்ளது. இதனையடுத்து அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது தையல் போட்ட பகுதியின் உள்ளே 3 கல் துகள்கள் இருந்துள்ளது. மதிவாணன் விபத்தில் சிக்கியபோது தரையில் கிடந்த கற்கள் காலின் உள்ளே போயிருந்ததை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சுத்தம் செய்யாமல் தையல் போட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று மதிவாணனுக்கு தனியார் மருத்துவமனையில் ஆபரேசன் செய்து கற்களை அகற்றவுள்ளனர்.