

திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னதாக அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார், தொடர்ந்து அவருக்கு கோவில் சார்பில் மாலையை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், கூட்டம் அதிகமாக கூடும் கோவில்களுக்கு வருகை தந்து தரிசனத்திற்காக காத்துக் கிடக்கும் குழந்தைகளையும் பெரியவர்களையும் வைத்துக் கொண்டு தரிசனம் செய்ய 3 முதல் 4 மணி நேரம் ஆகும் சூழ்நிலையில் இயல்பாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.
தமிழக மக்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாகி உள்ளார்கள். குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு, மின்வெட்டு, ஊழல் எதிர்ப்பு உள்ளிட்டவைகள் குறித்து மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த சூழ்நிலையில், மக்களிடம் அதிக அளவு எதிர்ப்புகளுக்கு உள்ளாகிறார்கள். மக்கள் எதை நினைத்து வாக்களித்தார்களோ, ஆனால் தற்பொழுது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளார்கள். மக்கள் பவர் கொடுத்தனர்..ஆனால் பவர் கட்டை மட்டுமே மக்களுக்கு தவெக அரசு வழங்குகிறது
அரசு மருத்துவமனையில் விரைவில் மாற்றங்கள் வரும் - அமைச்சர் சம்பத்குமார் பேட்டி|Changes will come soon at the government hospital - Minister Sampath Kumar Interview
கோவைக்கு மெட்ரோ ரெயில் கொண்டு வருவது தவெகவின் தேர்தல் வாக்குறுதியில் உள்ளதாக அமைச்சர் சம்பத்குமார் கூறியுள்ளார்|Minister Sampath Kumar has said that bringing a metro rail to Coimbatore is one of the election promises of the TDP.
அரசு மருத்துவமனையில் விரைவில் மாற்றங்கள் வரும் - அமைச்சர் சம்பத்குமார் பேட்டி
கோவைக்கு மெட்ரோ ரெயில் கொண்டு வருவது தவெகவின் தேர்தல் வாக்குறுதியில் உள்ளதாக அமைச்சர் சம்பத்குமார் கூறியுள்ளார்.