அதிகார வலிமை இல்லாத மக்களைதான் அரசு குறிவைக்கிறது - சீமான் காட்டம்

தூய்மைப் பணியாளர்களை சீமான் நேரில் சந்தித்து பேசினார்.
சென்னை,
வேளச்சேரி திருமண மண்டபத்தில் கைது செய்து அடைத்து வைக்கப்பட்டிருந்த தூய்மைப் பணியாளர்களை நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது;
“கூலிக்கு போராடும் மக்களை பற்றி கவலைப்படாமல், கூலி படம் பார்க்கிறார் முதல்வர். மக்களை பற்றி சிந்திக்காதவர்களை தேர்வுசெய்தது மக்கள் செய்த தவறு. ஆட்சியாளர்களை குறை சொல்ல நமக்கு எந்த தகுதியும் இல்லை. ஏனென்றால், அந்த ஆட்சியாளர்களை நிறுவியதே நாம்தான். சென்னை மாநகராட்சியை தூய்மைப்படுத்துவது தனியார் நிறுவனத்தின் வேலையா?
அதிகார வலிமை இல்லாத மக்களைதான் அரசு குறிவைக்கிறது. தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு அறிவிப்புகள் கொடுக்கிறார்கள். தூய்மைப்பணி தனியாரிடம் செல்லும்போது அரசு ஏன் இதெல்லாம் வழங்குகிறது? அனைத்தும் கொடுக்கும் அரசாங்கம், நிரந்தர வேலையையும் கொடுத்துவிடலாமே.” இவ்வாறு அவர் பேசினார்.






