உலகத்தர சிகிச்சை மக்களுக்கு கிடைத்திடும் நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது - உதயநிதி ஸ்டாலின்

உலகத்தர சிகிச்சை மக்களுக்கு கிடைத்திடும் நோக்கில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலகத்தர சிகிச்சை மக்களுக்கு கிடைத்திடும் நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது -  உதயநிதி ஸ்டாலின்
Published on

சென்னை,

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

உலகத்தரத்திலான சிகிச்சைகளை ஏழை - எளிய மக்களுக்கும் கிடைத்திடும் நோக்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நம் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ.53 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரத்த புற்றுநோய் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை மையத்தை இன்று திறந்து வைத்தோம்.

நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் சிறப்பு நிபுணர் குழுவுடன் செயல்படும் இம்மையம், குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான அடித்தளமாக அமையட்டும். என தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com