கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவு

கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனாவில் இரண்டாது அலை காரணமாக, நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. அதன்படி நேற்றைய கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி பதிவாகி இருந்தது. கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி, மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நிவாரணமாக 4000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி கோதுமை, உப்பு, ரவை, சர்க்கரை, பருப்பு, மஞ்சள் தூள், கடுகு, சீரகம், சோப்பு உள்ளிட்ட 13 வகை பொருள்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2,11,12,798 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மளிகை பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஜூன் 3ஆம் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று நிவாரண பொருட்களை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com