அரசாங்கம் இன்னும் கவனமா இருக்கணும் நல்லா செயல்படணும் - சசிகலா பேட்டி

அம்மா ஆட்சியில் இருந்த போது தமிழகம் எப்படி இருந்தது என்று ஒவ்வொரு வீட்டிலும் கேட்டால் தெரியும் என சசிகலா கூறினார்.
சசிகலா பேட்டி
Published on: 

சென்னை,

தவெக அரசாங்கம் இன்னும் கவனமாக செயல்படவேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடக்கும் கொலைகள் மற்றும் சிறுமிகள் மாயம் அதிகரித்து வருவதால் அதுபற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சசிகலா கூறியதாவது :-

செஞ்சி சிறுமி மாயமாகி 18 நாட்கள் ஆகிவிட்டது. காவல்துறையை பார்ப்பது முதல் - அமைச்சர் தான். அதனால் இன்னும் கவனம் தேவை. சிங்கப்பெண் இருக்குனு ஒரு பக்கம் சொல்றாங்க. ஆனால், ஒரு பக்கம் பெண் குழந்தைகளும் காணாமல் போய்கொண்டு இருக்கின்றன. அதற்கு அரசிடம் இருந்து எந்த வித பதிலும் இல்லை. மொத்தத்துல அரசாங்கம் இன்னும் கவனமாக செயல்பட வேண்டும். அம்மா ஆட்சியில் இருக்கும்போது தமிழகம் எப்படி இருந்தது என்று ஒவ்வொரு வீட்டிலும் சென்று கேட்டால் தெரியும். அதை எல்லாம் பார்த்தவங்க இங்க இருக்கோம். அப்படி இருக்கும்போது அரசாங்கம் வேலையை முழுமையாக கையில் எடுத்துக்கொண்டு செய்தால் தான் இது போன்ற பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X