

சென்னை,
சென்னை விமான நிலையத்தில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என கடந்த முறை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார், ஆனால் அதை அப்போதைய திமுக அரசு பின்பற்றவில்லை. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. அரசு அதிகாரிகள் மட்டும் சென்று மலையில் தீபம் ஏற்றச்சொல்லி சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசே பிரச்சனையை உண்டாக்கக்கூடாது. மத நல்லிணக்கத்தை சீர்குலைய விட மாட்டோம் என்று கூறி, குறைய வைத்துவிட வேண்டாம். புரிதல் இன்றி தவெக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதா?
தமிழகம் கலவர பூமியாக மாறாது என்று அமைச்சர் அருண்ராஜ் கூறுகிறார். ஆனால் இன்று மதநல்லிணக்கத்தை சீர்குலைப்பது யார்? நாளை மலைத்தூணில் தீபம் ஏற்றவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பாகும். நீதிமன்ற ஆணைப்படி மலைத்தூணுக்கு சென்று அரசு அதிகாரிகள் தீபம் ஏற்ற வேண்டும். மலை உச்சியில் தீபம் ஏற்றுவதால் அந்த இடம் அவர்களுக்கு சொந்தமாகி விடாது.
செஞ்சி சிறுமி மாயமான விவகாரத்தில் ஈகோ பார்க்காமல் சிபிஐ விசாரணை கோரி முதல்வர் கடிதம் எழுத வேண்டும். சிறுமி மாயமாகி 40 நாட்களாகிவிட்டது. இன்னும் துப்புக் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் ஈகோ பார்க்கக்கூடாது. சிபிஐ அவர்களாக விசாரணைக்கு வர முடியாது. தமிழக முதலமைச்சர் தான் கடிதம் எழுத வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.