‘தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' - பிரேமலதா விஜயகாந்த்

விபத்துகள் நடைபெறாமல் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
‘தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' - பிரேமலதா விஜயகாந்த்
Published on: 

சென்னை,

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நிகழ்ந்த வாகன விபத்தில் 40 தொழிலாளர்கள் படுகாயமடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தமிழக அரசு உடனடியாக உரிய மருத்துவச் சிகிச்சை அளித்து. அவர்கள் விரைவில் முழுமையாகக் குணமடையத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய உதவிகளையும் வழங்கிட வேண்டும். தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், இதுபோன்ற விபத்துகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுப்பதற்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் நலம்பெற்று தங்களது குடும்பத்தினருடன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com