அரசு வேலை வாங்கி தருவதாகவிவசாயியிடம் ரூ.1½ லட்சம் மோசடி:2 பேர் மீது வழக்கு

தேவதானப்பட்டி அருக அரசு வேலை வாங்கி தருவதாக விவசாயியிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசா வழக்குப்பதிவு செய்தனர்.
அரசு வேலை வாங்கி தருவதாகவிவசாயியிடம் ரூ.1½ லட்சம் மோசடி:2 பேர் மீது வழக்கு
Published on

தேவதானப்பட்டி அருகே உள்ள அழகர் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் சாமி (வயது 33). விவசாயி. இவர், ஜெயமங்கலம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், மேல்மங்கலத்தை சேர்ந்த சிவக்குமார் (38), சாந்தகுமார் (30) ஆகியோர் எனக்கு அறிமுகம் ஆனார்கள். அவர்கள் அரசு அதிகாரிகளை தங்களுக்கு தெரியும் என்றும், இதனால் எனது தம்பிக்கு பெரியகுளம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறினர். அதற்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும் என்றனர். அதை நம்பிய நான், அவர்களிடம் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.1 லட்சம் கொடுத்தேன்.

அதன்பின்னர் பலமுறை தொடர்பு கொண்டும் வேலை வாங்கி தரவில்லை. இதனால் பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் பணத்தை தராமல் இழுத்தடித்து வருகின்றனர். எனவே வேலை வாங்கி தராமல் மோசடி செய்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் சிவக்குமார், சாந்தக்குமார் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com