தொடர் வெடிவிபத்துகளுக்கு அரசின் முறையற்ற மெத்தனப்போக்கே காரணம் - எல்.முருகன்

உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு எல்.முருகன் இரங்கல்களை தெரிவித்துள்ளார்.
தொடர் வெடிவிபத்துகளுக்கு அரசின் முறையற்ற மெத்தனப்போக்கே காரணம் - எல்.முருகன்
Published on

சென்னை,

மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

விருதுநகர் மாவட்டம் கட்டுனார்பட்டி பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதும், மேலும் பலர் படுகாயமடைந்திருப்பம் மிகுந்த வேதனையளிக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகளாகவே ஏற்பட்டு வரும் தொடர் வெடிவிபத்துகளுக்கு அரசின் முறையற்ற மெத்தனப்போக்கே காரணமென்றும், பட்டாசு ஆலைகளின் தரம் குறித்த கட்டுப்பாடுகள் முறைப்படுத்தப்பட வேண்டுமென்றும் நாம் தொடர்ந்து கூறி வருகிறோம். அதற்கு அரசு செவிமடுக்காமல் போனதே இந்த மாதிரியான விபத்துகளுக்கு காரணமாக அமைந்து வருகிறது.

இந்த கோரமான வெடிவிபத்தில் உயிரிழந்தோர் மற்றும் படுகாயமடைந்தோரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், உயர்தர சிகிச்சையும் வழங்கிட தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com