‘பொங்கல் பரிசு பணத்தை டாஸ்மாக் மூலம் திரும்ப பெறுவதே அரசின் திட்டம்’ - சவுமியா அன்புமணி


‘பொங்கல் பரிசு பணத்தை டாஸ்மாக் மூலம் திரும்ப பெறுவதே அரசின் திட்டம்’ - சவுமியா அன்புமணி
x

தி.மு.க. அரசு பொதுமக்களை ஓட்டு போடும் மெஷின்களாக நடத்தி வருகிறது என சவுமியா அன்புமணி விமர்சித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. அன்புமணி அணி சார்பில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வயலப்பாடி பகுதியில் 'சிங்க பெண்ணே எழுந்து வா' என்ற தலைப்பில் 'மகளிர் உரிமை மீட்பு பயணம்' நடைபெற்றது. இதில் பசுமை தாயகத்தின் தலைவர் சவுமியா அன்புமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

“தி.மு.க. அரசு பெரிய திட்டங்களை அறிவித்து விட்டு அவற்றை செயல்படுத்தாமல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று தி.மு.க. அரசு அறிவித்துள்ளது.

மக்களின் வரிப்பணத்தில் இருந்து ரூ.3 ஆயிரத்தை கொடுத்துவிட்டு அதனை மீண்டும் டாஸ்மாக் கடை மூலம் திரும்ப பெறுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

ஏழை, எளிய மக்களை வஞ்சித்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்காமல் பொய் வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்துவிட்டு பொதுமக்களை ஓட்டு போடும் மெஷின்களாக நடத்தி வருகின்றனர். டாஸ்மாக்கை ஒழித்திட, ஏழை எளிய விவசாயிகளின் வாழ்வாதாரம் செழித்திட அன்புமணி பக்கம் நீங்கள் அனைவரும் நிற்க வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story