

சென்னை,
தமிழக கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழகத்தில் கஜா புயல் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. அதைத்தொடர்ந்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், மக்களுக்கு நேரிட்ட அவலங்களை அவர் நேரில் கண்டார்.
எனவே, மக்களின் துயர் துடைக்கும் வகையிலும், நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்கு உதவும் வகையிலும், நவம்பர் மாத சம்பளத்தை முதல்அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.