நெல்லையில் அமையவுள்ள மாபெரும் நூலகத்திற்கு காயிதே மில்லத் பெயர்- மு.க.ஸ்டாலின்

பொன் விழா மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்
நெல்லையில் அமையவுள்ள மாபெரும் நூலகத்திற்கு காயிதே மில்லத் பெயர்- மு.க.ஸ்டாலின்
Published on

திருச்சி,

திருச்சியில் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொன் விழா மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின்,

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் நடைபெறும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டைத் தொடங்கி வைத்து, விருதுகள் வழங்குவதில் பெருமகிழ்ச்சியும், பெருமையும் நான் அடைகிறேன்.கடந்த நான்காண்டுகளில், சிறுபான்மையின மக்களுடைய சமூக - பொருளாதார, கல்வி நிலைகளை மேம்படுத்துவதற்காக ஏராளமான திட்டங்களை, சாதனைகளை படைத்திருக்கிறோம்.அண்மையில்கூட, நங்கநல்லூரில் 'தமிழ்நாடு ஹஜ் இல்லம்' கட்டப்படும் என்று அறிவித்தேன். பலரும் என்னிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.

இதேபோல், நம்முடைய திராவிட மாடல் அரசில் ஏராளமான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து, இஸ்லாமிய மக்களின் உரிமைகளை காக்க குரல் கொடுத்து வரக்கூடிய இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம்.அதே நம்பிக்கையுடன் தான் நீங்களும் சில கோரிக்கைகளை இந்த மாநாட்டு மூலமாக, தீர்மானங்களாக வடித்தெடுத்து சொல்லியிருக்கிறீர்கள். அதுவும் என்னுடைய கவனத்திற்கு வந்திருக்கிறது. என தெரிவித்தார்.

பின்னர், நிகழ்ச்சியில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்,

நெல்லை நூலகத்திற்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும். சென்னை பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்விருக்கை அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com