

சென்னை,
வருங்கால வைப்பு நிதி செலுத்தி வரும் சந்தாதாரர்கள், தொழில் நிறுவனங்கள் வருங்கால வைப்பு நிதி தொடர்பான தங்களது பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில், உங்கள் அருகில் வருங்கால வைப்பு நிதி என்ற தலைப்பில் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் ஒவ்வொரு மாதமும் 10-ந் தேதி குறைதீர் முகாமை நடத்தி வருகிறது. அக்டோபர் மாதம் 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் இந்த மாதத்துக்கான குறைதீர் கூட்டம் 11-ந் தேதி சென்னை தெற்கு மண்டல அலுவலக வளாகத்தில் நடைபெறும்.
வருங்கால வைப்பு நிதி தொடர்பாக புகார் அளிக்க விரும்புபவர்கள் அன்றைய தினம் உரிய ஆவணங்களுடன் மேற்படி அலுவலகத்துக்கு நேரில் வந்து புகார் மனு அளித்து தங்களது குறைகளுக்கு தீர்வு காணலாம்.
மேற்கண்ட தகவல் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் சென்னை தெற்கு மண்டல ஆணையர் பி.ஹங்சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.