ஆர்ப்பரித்து கொட்டும் திற்பரப்பு அருவி - ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையால் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
ஆர்ப்பரித்து கொட்டும் திற்பரப்பு அருவி - ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்
Published on

கன்னியாகுமரி,

தொடர் விடுமுறையால் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா தளங்களில் மிக முக்கியமான ஒன்று திற்பரப்பு அருவியாகும். ஈஸ்டர் பண்டிகையையொட்டி பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அலை மோதுகிறது.

அதேபோல் இன்றும் விடுமுறை நாள் என்பதால் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். குமரி மாவட்ட மலையோரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அருவியில் கொட்டும் தண்ணீரில் நீண்ட நேரம் நீராடி மகிழ்வதுடன் அருகில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்தும் மகிழ்கின்றனர். மேலும் அருவியின் மேற்பகுதியில் உள்ள சுற்றுலாப் படகு துறையில் படகு சவாரி செய்தும் மகிழ்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com