திருச்சிக்கு கடத்தி வந்த ஆமை குஞ்சுகள் மீண்டும் விமானம் மூலம் மலேசியாவுக்கு அனுப்பி வைப்பு

திருச்சிக்கு கடத்தி வந்த ஆமை குஞ்சுகள் மீண்டும் விமானம்மூலம் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன
திருச்சிக்கு கடத்தி வந்த ஆமை குஞ்சுகள் மீண்டும் விமானம் மூலம் மலேசியாவுக்கு அனுப்பி வைப்பு
Published on

மலேசியாவில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் திருச்சிக்கு ஆமைகுஞ்சுகள் கடத்தி வரப்பட்டன. மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி மதுரையை சேர்ந்த முகமது அசார், ராமநாதபுரத்தை சேரந்த ஹபீஸ் நஸ்தார் ஆகிய 2 பேரிடம் இருந்து 6 ஆயிரத்து 850 ஆமை குஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன. வனத்துறை அதிகாரிகள் ஆமைகுஞ்சுகளை பார்வையிட்டு மீண்டும் அவைகளை மலேசியாவுக்கு அனுப்பி வைக்க ஆலோசனை வழங்கினர். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு திருச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற ஏர் ஏசியா விமானத்தில் ஆமை குஞ்சுகளை மீண்டும் அனுப்பி வைத்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com