

கோவை,
கோவை மதுக்கரையை அடுத்த எட்டிமடை பகுதியில் எல்லை மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடந்த திருவிழாவில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.
இந்த விழாவின் ஒரு பகுதியாக கால்நடை திருவிழா நடைபெற்றது. இதில், எட்டிமடை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நாட்டு மாடுகள், காங்கேயம் காளைகள், குதிரைகள், சேவல் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இதேபோன்று அலங்கரிக்கப்பட்ட வெள்ளை நிற குதிரை ஒன்று வரவழைக்கப்பட்டு இருந்தது. அந்த குதிரை திருவிழாவிற்கு வந்த இசை குழுவினரின் மேள இசைக்கு ஏற்ப முன்னும் பின்னும் நடனம் ஆடி அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.