மனைவி இறந்த துக்கம் தாளாமல் பஸ் டயரில் தலையை கொடுத்த கணவன் - அனாதையான குழந்தை..!

மனைவி இறந்த துக்கத்தில் பஸ் டயருக்கு அடியில் தலையை வைத்து இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கலங்க வைத்துள்ளது.
மனைவி இறந்த துக்கம் தாளாமல் பஸ் டயரில் தலையை கொடுத்த கணவன் - அனாதையான குழந்தை..!
Published on

சென்னை,

கடலூர் அருகே உள்ள உண்ணாமலை செட்டி சாவடி பனங்காட்டு காலனியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள வாகன பராமரிப்பு நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் பவானி என்பவருக்கும் திருமணமாகி கௌதம் என்ற குழந்தை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு மனைவி, மகனோடு கடலூர் சில்வர் பீச் சென்றுள்ளார்.

அப்போது குளித்துக் கொண்டிருந்தபோது, குணசேகரன் கண்ணெதிரே பவானி கடலுக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளார். தீவிர தேடுதலுக்கு பின் பவானி சடலமாக மீட்கப்பட்டார். அப்போதிருந்தே பித்து பிடித்தது போல் சுற்றித்திருந்த குணசேகரன், சரியாக வேலைக்கும் செல்லாமல் குழந்தையையும் கவனிக்காமல் இருந்துள்ளார். இதனையறிந்த குழந்தையின் தாத்தா - பாட்டி குணசேகரனிடமிருந்து குழந்தையை அழைத்து சென்று பராமரித்து வருகின்றனர்.

இதோடு விடாமல் குணசேகரன் அன்று மாலையே அதே இடத்தில் வேறொரு தனியார் பேருந்து நிறுத்திவிட்டு, மூவ் ஆகும்போது பின் டயருக்கு அடியில் தலையைக் கொடுத்தார். இம்முறை யாரும் கவனிக்காததால், கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்து ஏறி இறங்கியது. இதனால் அவர் தலை சிதறி அங்கேயே உயிரிழந்தார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்நிலையில் காலை, மாலை என அவர் டயர் அடியில் தலை வைத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவம் குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com