சென்னையில் கொரோனா பாதிப்பு 156 ஆக குறைவு

சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 156 ஆக குறைந்து உள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு 156 ஆக குறைவு
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சமீப காலங்களாக குறைந்து வருகிறது. இதேபோன்று சென்னையிலும் தொற்று குறைந்து வருகிறது. இந்நிலையில், தமிழக சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையில் 156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

இந்த எண்ணிக்கை நேற்று 160, நேற்று முன்தினம் 167 மற்றும் அதற்கு முந்தின தினம் 163 ஆக பதிவாகி இருந்தது. சென்னையில் தொற்று எண்ணிக்கை இன்று குறைந்து உள்ளது. கோவையில் பாதிப்பு இன்று 132 (நேற்று 136) ஆக உறுதியானது. இது நேற்று முன்தினம் 139 ஆக இருந்தது. செங்கல்பட்டில் 88 ஆக பதிவாகி உள்ளது. நேற்று 90 ஆகவும், நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 92 ஆகவும் இருந்தது.

இதேபோன்று கொரோனா பாதிப்பு ஆனது, இன்று ஈரோடு 90, திருப்பூர் 73, தஞ்சை 68, திருவள்ளூர் 55, சேலம் 56, நாமக்கல் 51, திருச்சி 45 என்று பதிவாகி உள்ளது. இவற்றில் திருப்பூர், சேலம் மற்றும் நாமக்கல்லில் எண்ணிக்கை சற்று அதிகரித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com