தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு

தமிழகத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் கணிசமாக கட்டுக்குள் உள்ளது. தொற்று பாதிப்பு இரட்டை இலக்க எண்களிலேயே பதிவாகி வருகிறது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக கொரோனா பாதிப்பு பதிவாகி வரும் நிலையில், இன்று தொற்று பாதிப்பு நேற்றை விட அதிகரித்த்துள்ளது . நேற்று 56 பேருக்கு தொற்று உறுதியான நிலையில்,இன்று 59 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 55 ஆயிரத்து 099- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 43- பேர் குணம் அடைந்தனர். கொரோனா பாதிப்புக்கு புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. தொற்று பாதிப்பைக் கண்டறிய 15,665 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் இன்று 33 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com